Posts

Showing posts from December, 2019

கடவுள் வாழ்த்து

வள்ளுவத்தில் சொல்லாதது எதுவுமே இல்லை. ஆகவே தான் அது உலகப் பொதுமறை எனப்படுகிறது.வள்ளுவர், தன் குறள்களில் சொல்லியுள்ள அறிவுரைகள் பல.அவற்றுள் குழந்தைகளுக்கும் பொருந்துவனவற்றை தனியே தொகுத்து எளிமையாக "பாப்பா குறள்"   என எழுத ஆரம்பித்துள்ளேன்.இது பள்ளி சிறுவர்களுக்கு மிகவும் உபயோகமாய் இருக்கும் என எண்ணுகிறேன். இனி.. 1)அகர முதல எழுத்தெல்லாம் ஆதி பகவன் முதற்றே உலகு "அ" எழுத்துக்களுக்கு முதல்..ஆதி, பகவன் உயிர்களுக்கு முதல். தாயும்..தந்தையும் நம் முதல் தெய்வம் பாப்பா.. 2)கற்றதனால் ஆய பயனெங்கொல் வாலறிவன் நற்றாள் தாழாஅர் எனின் இறைவனை வணங்காதவர் படித்திருந்தாலும் எந்த பயனுமில்லை. கடவுளை வணங்காதவர் கற்றோர் ஆயினும் பயனில்லை பாப்பா 3)மலர்மிசை ஏகினான் மாணடி சேர்ந்தார் நிலமிசை நீடுவாழ் வார் பக்தர்களின் மலர் போன்ற மனதில் உள்ளஇறைவனின் திருவடிகளை எப்போதும்நினைப்பவர்..இன்ப உலகில் நிலைத்து வாழ்வர். இறைவனின் பாதக் கமலத்தை பற்றிடு என்றும் பாப்பா 4) வேண்டுதல்வேண் டாமை இலானடி சேர்ந்தார்க்கு யாண்டும் இடும்பை இல விருப்பு, வெறுப்பு இல்லாத இறைவனை நம்புவர்க்கு